அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள செல்போன் கடையில் கொள்ளை; காவல்துறையினர் விசாரணை!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள செல்போன் கடையில் திருட்டு ஏற்பட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 43,000 ரொக்க பண மற்றும் இரண்டு செல்போன்கள் திருட்டு போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை கடையின் உரிமையாளர் பார்க்கும் பொழுது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் தங்கதுரை அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தலைவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான காவலர்கள் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர் அறந்தாங்கி நகர் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவம் நடைபெறுவதால் வியாபாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
