குளித்தலை அருகே இனுங்கூரில் தவெக அலுவலகம் திறப்பு விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம்

குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் லாகுல் பிரசாந்த் தலைமையில் சிறப்பு வரவேற்புரை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூரில் குளித்தலை கிழக்கு ஒன்றிய த வெ க சார்பில் ஒன்றிய அலுவலக திறப்பு விழா மற்றும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. புதிய அலுவலக திறப்பு விழாவில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் லாகுல் பிரசாந்த் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தமிழன் ராஜீவ் காந்தி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது அவர்கள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர். தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் துணை அணி நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story