பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி அமைத்து தராத வாலாஜா நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

X
Ranipet King 24x7 |22 Dec 2025 1:34 PM ISTராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி கூட அமைத்து தராத வாலாஜா நகராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய சிறுபான்மை செயலாளர் சையத் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையம் அருகில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி கூட அமைத்து தராத வாலாஜா நகராட்சியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி தேசிய சிறுபான்மை செயலாளர் சையத் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். பழமை வாய்ந்த வாலாஜா நகராட்சி நிர்வாகத்தில் அடிப்படை வசதி கூட சரியான முறையில் கிடைக்கவில்லை என்றும் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை கூட சுத்தம் செய்யாத நகராட்சியாக செயல்பட்டு வருகின்றது. இங்கு உள்ள பழமையான அரசினர் பள்ளியில் தான் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்று வந்தார். ஒரு ஜனாதிபதி பயின்ற பள்ளியை கூட அவங்களால் சரி செய்யாத நிர்வாகமாக திகழ்ந்து வருகிறது இந்த வாலாஜா நகராட்சி பல முறையும் இந்த மாவட்டத்திலுள்ள அமைச்சர் ஆர் காந்தியிடமும் வாலாஜா நகராட்சி நிர்வாகத்திடமும் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இன்னும் இருபது நாளுக்குள் நாங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடவில்லை என்றால் தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் காவல்துறையினர் எங்களை கைது செய்தாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம் இந்த நகரத்தில் வசிக்கும் பொது மக்களுக்காக எங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்போம் என்று பாஜக சிறுபான்மை தேசிய தலைவர் இப்ராஹிம் கண்டன உரையாற்றினார். இறுதியாக கண்டன கோஷங்கள் எழுப்பியும் கண்டனத்தை நிறைவு செய்தனர். இதில் பாஜக அதிமுக மாவட்ட மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
