வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர பந்தலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது பேரணியை காலால் உதவி ஆணையர் ரமேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தப் பேரணியில் நகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கையில் வாக்காளர் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தி கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்தப் பேரணி ஆடிப்பூர பந்தலில் இருந்து தொடங்கி நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் பந்தலில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் குமார்,வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story