கீழ்நகர் கிராமத்தில் கலையரங்கம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்த ஆரணி எம்எல்ஏ.

X
Arani King 24x7 |23 Dec 2025 12:28 AM ISTஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் ரூ.8லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தேர்வு செய்த ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன்.
ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் ரூ.8லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தினை ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பார்வையிட்டு தேர்வு செய்தார். ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலையரங்கம் கட்டித்தரக்கோரி ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இதன் காரணமாக ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அவரது 2025-2026ம் ஆண்டிற்கான நிதியிலிருந்து ரூ.8லட்சம் ஒதுக்கி கலையரங்கம் கட்டுவதற்கான இடத்தினை நேரில் பார்வையிட்டு தேர்வு செய்தார். உடன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குமரன், முன்னாள் ஊராட்சித்தலைவர் தண்டபாணி மற்றும் அதிமுக சேர்ந்த பிச்சாண்டி, பாபு, முனுசாமி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story
