வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - இயக்குனர் பொன்ராம் பேட்டி
Periyakulam King 24x7 |23 Dec 2025 10:29 AM ISTபேட்டி
தேனி வெற்றி திரையரங்கில் வெளியாகி உள்ள கொம்புசிவி திரைப்படத்தை மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் மற்றும் படத்தின் இயக்குனர் பொன்ராம் ஆகியோர் இணைந்து படம் பார்ப்பதற்கு வருகை தந்தனர் இதற்காக திரையரங்கிற்கு வருகை தந்த சண்முகபாண்டியன் மற்றும் பொன்ராமிற்கு தேமுதிக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய இயக்குனர் பொன்ராம் வைகை அணை கட்டும் போது பாதிக்கப்பட்ட 12 ஊர்களை சேர்ந்த மக்களை அழைத்து வந்து படம் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறோம் உண்மை சம்பவத்தை சினிமா தன்மையுடன் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம் இந்த படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர் வைகை அணைக்காக தங்கள் நிலத்தை கொடுத்த ஒரு சில கிராமங்களுக்கு தற்போதும் குடிப்பதற்கு கூட தற்போதும் தண்ணீர் வரவில்லை அது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பேன் அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார் தொடர்ந்து படத்தின் கதாநாயகன் சண்முக பாண்டியன் கூறுகையில் கடந்த ஆறு மாதமாக தேனியில் தான் பட காட்சிகளை எடுத்தோம் எல்லா கிராமங்களும் சென்று மக்களை சந்தித்தோம் அந்த மக்களை அழைத்து வந்து படம் பார்க்க ஏற்பாடு செய்தோம் வைகை அணை தொடர்பான காட்சிகள் வரும்போது அவர்கள் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்தது மகிழ்ச்சியாக இருந்தது இங்குள்ள மக்களிடம் பழகியுள்ளேன் மதுரையை போல் தேனியும் எனக்கு சொந்த ஊராக மாறி உள்ளது என தெரிவித்தார் நான் அடுத்து நான்கு ஐந்து படங்களில் நடிப்பதற்கு கதை கேட்டுள்ளேன் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன், அண்ணன் விஜய பிரபாகரன் அரசியலில் பயணிப்பார் என தெரிவித்தார்
Next Story


