வீர முத்தரையர் சங்கம் அஞ்சலி

X
Pudukkottai King 24x7 |23 Dec 2025 1:08 PM ISTவீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர் சி. கருப்பையா முத்தரையர் அஞ்சலி
புதுக்கோட்டையில் இன்று (23/12/2025) காலை 10:30 மணியளவில் புதுக்கோட்டை மாநகர மேயர் திலகவதி செந்தில் அவர்களின் கணவருமான, முன்னாள் புதுக்கோட்டை தி.மு.க மாநகர செயலாளர் செந்தில் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர் சி. கருப்பையா முத்தரையர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய போது. உடன் வீர முத்தரையர் சங்க புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜபுரம் சௌமியா மூர்த்தி என்ற துரை, புதுக்கோட்டை மாநகர அவைத் தலைவர் கோவில்பட்டி சிங்காரம், புதுக்கோட்டை மாநகர தலைவர் மேட்டுப்பட்டி கைலாசம், புதுக்கோட்டை மாநகர துணை தலைவர் சிதம்பரம், புதுக்கோட்டை மாநகர பொருளாளர் பாலன் நகர் கேப்டன் தங்கவேல், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவரும், ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலர் லட்சுமணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவர் முக்கம்பட்டி பாண்டிச்செல்வன், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் பெருமநாடு நாராயணன், புதுக்கோட்டை மாநகர மேற்கு பகுதி தலைவர் கோவில்பட்டி மூர்த்தி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ராயப்பட்டி அபினேஷ் மேலும் எங்களுடன் மதுரை மேலூர் மாவட்ட கவுன்சிலர் பாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
