அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் விருப்ப மனு பெறுவதற்கு இன்றே கடைசி நாள்; அலைமோதும் கூட்டம்!!

X
ஆத்தூர் தொகுதியில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்து போட்டியிடும் தொகுதியான ஆத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக அதிமுகவினர் ஆர்வம் காட்டுகின்றனர். தொடர்ந்து கூட்டணிக்கு ஒதுக்கப்படும் அந்த தொகுதி இம்முறை அதிமுகவே நேரடி போட்டியிடும் என்று கூறப்படுகிறது. ஆகையால் அந்தத் தொகுதியில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றனர். நிலக்கோட்டை தொகுதியைச் சார்ந்த சேவுகம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் மாசாணம் என்பவரும், வத்தலக்குண்டு ஒன்றியத்தில் முக்கிய நிர்வாகியான செல்லப்பாண்டி என்பவரும் இன்று ஆத்தூர் தொகுதிக்கு விருப்பமனு பெற்று பூர்த்தி செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த தொகுதிக்காரர்களும் ஆத்தூர் தொகுதியில் குதிப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
Next Story
