ஆண்டாள் கோயிலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சுவாமி தரிசனம் செய்தார்.
Srivilliputhur King 24x7 |23 Dec 2025 1:47 PM ISTஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தலைமை தேர்தல் அதிகாரி சுவாமி தரிசனம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சுவாமி தரிசனம் செய்தார். 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் 4-ம் நாளான இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம், பெரிய பெருமாள் சந்நிதியில் வழிபாடு நடத்திய தலைமை தேர்தல் அதிகாரி, தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் போட்டோ எடுத்துக்கொண்டார். அவருடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story


