ராமநாதபுரம் கலாம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது

X
Ramanathapuram King 24x7 |23 Dec 2025 8:32 PM ISTவிக்டரி அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, நிகோலஸ் சிலம்பம் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கலாம்உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது
ராமநாதபுரம் விக்டரி அகாடமி சிபிஎஸ்இ பள்ளி, நிகோலஸ் சிலம்பம் பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கலாம்’ஸ் உலக சாதனை நிகழ்ச்சி ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் விக்டரி அகாடமி பள்ளியின் தாளாளர் முரளி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார் கலந்து கொண்டார். இதில் 360 மாணவர்கள் கலந்து கொண்டு பானை மேல் நின்றவாறு 60 வினாடி யும் , ஒரு மணி நேர இடைவிடா ஒற்றை, இரட்டை சிலம்பு, வாள் விச்சு, மான் கொம்பு உள்பட 10 க்கும் மேற்பட்ட சிலம்பம் சுழற்றி சாதனை புரிந்தனர். இதில் தலைத்தோப்பு போர் வீரன் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.இதில் பங்கேற்றோருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார், விக்டரி அகாடமி சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் முரளி, செயலாளர் மாலதி, சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார், ரோட்டரி கிளப் தலைவர் சாஜன் ஷா, நிக்கோலஸ் சிலம்பம் பள்ளி தலைமை பயிற்சியாளர் கலை வளர்மணி ஆகியோர் பாராட்டு சான்றிதழ், மற்றும் கேடயங்கள் வழங்கினர் பயிற்சியாளர் கலை வளர்மணி தி.திருமுருகன், நர்மதா மற்றும் யுவாந்திகா மாணவர்களை உற்சாகப்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
Next Story
