மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசைக்கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் நான்கு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!
மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசைக்கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் நான்கு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை! பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புச்சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப்பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது,மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து, திட்டத்தை முடக்குவது, வேலையாட்களை குறைப்பது பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்ன அண்ணல் காந்தியடிகளின் பெயரை இத்திட்டததில் இருந்து நீக்குவது, நூறு நாள் வேலையையே இல்லாமல் செய்து, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நாசகார சதிச்செயலையும், அதற்கு ஆதரவு தரும் அ.தி.மு.க.வைக்கண்டித்தும், அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர்,வேப்பந்தட்டை ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டமானது, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்(எனது), தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் நடைபெறுகிறது. ஆலத்தூர், வேப்பூர்,வேப்பந்தட்டை ஆகிய மூன்று இடங்களில் அந்தந்த ஒன்றிய கழகச்செயலாளர்கள் தலைமையில் நடைபெறுகிறது. மொத்தம் நான்கு இடங்களில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சிகளின் மாநில,மாவ‌ட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர,பேரூர் வார்டு,கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிகள்,அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், தோழமைக்கட்சி நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story