கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்
X
கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் 29.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் .ந. மிருணாளினி, தகவல்.
கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் 29.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் .ந. மிருணாளினி, தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்கள்,4 பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், குக்கிராமங்கள், வார்டுகளில் தகுதியுள்ள 1.19 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் (NADCP) கீழ் 8-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி போடும் முகாம்கள் 29.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறவுள்ளது. மேலும் இம் முகாம்களில் விடுபட்ட கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படும். நான்கு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து கறவையில் உள்ள, சினை உள்ளிட்ட பசு, எருமை மற்றும் எருதுகளுக்கும் தடுப்பூசி பணி முகாம்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அனைத்து கால்நடைகளுக்கும் தனித்துவ 12 இலக்கு எண்கொண்ட காதுவில்லை அணிவித்து, கால்நடை தொடர்பான விபரங்களை Bharat Pashudhan Portal – இல் பதிவேற்றம் செய்யப்படுவது ஒன்றிய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, கால்நடை பராமரிப்பு துறையினர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி பணிக்கு வரும் போது அனைத்து கால்நடைகளுக்கும் அடையாள காதுவில்லை பொருத்தி 100% கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி மேற்கொண்டு கால்நடை வளர்ப்போர் பயன்பெறுமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story