கரூரில் தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Karur King 24x7 |24 Dec 2025 3:25 PM ISTகரூரில் தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூரில் தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் மலைக்கொழுந்தான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர், தமிழ்நாடு அரசு ஒன்றிய அலுவலர் பொறுப்பாளர் பாரதிதாசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், இருபால் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அறியாத அரசாணைகளும் அறிந்து கொள்ள வேண்டிய தீர்வுகளும் என்ற தலைப்பில் தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமையில் இரண்டாவது கருத்தரங்கு நடைபெற்றது. கடமையை செய் உரிமையைக் கேள் என்ற தலைப்பில் பீனிக்ஸ் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் வடிவேல் தலைமையில் விவாதம் நடைபெற்றது. நிகழ்ச்சியை நிறைவில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் சிற சிறப்பிடம் பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Next Story





