நாமக்கல் மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்கலந்து கொண்ட பொதுக்கூட்டம்திருச்செங்கோட்டில் நடைபெற்றது
Tiruchengode King 24x7 |24 Dec 2025 3:42 PM ISTநாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பயணத்தின் 41வது நாள் நிகழ்வாக திருச்செங்கோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பயணத்தின் 41வது நாள் நிகழ்வாக திருச்செங்கோட்டில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் சங்ககிரி சாலையில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார்.கூட்டத்தில் கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் அதிமுக அமைப்புச் செயலாளர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி,முன்னாள் அமைச்சர் சரோஜா பரமத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் பொன் சரஸ்வதிதமிழ்நாடு பாஜக துணை தலைவர் கே பி ராமலிங்கம் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பிரச்சார பிரிவு தலைவர் பாண்டியராஜன் பாஜக நிர்வாகிகள் மகேஸ்வரன் நாகராஜ்,ரமேஷ்,பாலமுரளி சத்தியமூர்த்தி வக்கீல் காந்தி லோகநாதன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய தமிழகபாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்கே பி ராமலிங்கம் பேசியபோது கூறியதாவது போதை கலாச்சாரத்தின் உச்சத்தில் தேசத்தின் அவமானமாக தமிழகத்தை மாற்றியுள்ள திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் அதற்கு பாஜக அதிமுக இணைந்து இந்த பயணம் 41வது நாளாக நடைபெறுகிறது. இதுவரை நடந்த தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என நடந்தது. 2026 தேர்தல் திமுக வர கூடாது என்பதற்கா நடைபெறுகிறது என பேசினார். அவரைத் தொடர்ந்து பேசியமுன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் செல்கிற பயணமானாலும், பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சல்கிற பயணமானாலும் எங்கே பார்த்தாலும் அலையலையாக மக்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அது இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையப் போகிறதுஎன்பதற்கான அடையாளமாக உள்ளது. இந்த திமுக ஆட்சியைவீட்டுக்கு அனுப்ப வேண்டும் இந்த நாலரை ஆண்டு காலம் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். அனைத்து துறையிலும் தொழில் துறையாக இருந்தாலும் சரி விவசாயமாக இருந்தாலும் சரி அனைவருமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழக மக்கள் எங்கே பார்த்தாலும் போதைக்கு அடிமையாகின்ற ஒரு ஆட்சியாக இந்தியாவிலேயே தமிழகம் தான் போதை நிறைந்த மாநிலம் என்ற பெயரைத்தான் எடுத்திருக்கின்றது. வளர்ச்சியில் அல்ல அதேபோல இந்தியாவிலேயே கடன் நிறைந்த மாநிலம் எது என்று சொன்னால் இன்று தமிழகம் என்று நிலைமையை இன்றைய திமுக ஆட்சியினர் உருவாக்கி இருக்கின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களை சாலைத் திட்டங்கள்,குடிநீர் திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.இன்றைய ஆட்சியாளர்கள் என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும. ஏன் நாங்கள் இதைச் சொல்கிறோம் என்று சொன்னால் விவசாயமாக இருந்தாலும் சரி விசைத்தறி தொழிலாக இருந்தாலும் சரி அனைத்து தொழிலுமே முடங்கி கொண்டிருக்கின்றது. தமிழக மக்களுடைய நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொன்னால் திமுகவுடைய கொள்கை என்பது வேறாக இருந்தாலும் கூட மத்திய அரசிலிருந்து கேட்டு பெறவேண்டிய நிதியைப் பெற்றுத் தர வேண்டும் ஆனால் அவர்கள் சிறுபான்மையினருடைய வாக்குகளை பெறுவதற்காக வேண்டுமென்றே மத்திய அரசோடு தகராறு செய்து கொண்டு மக்களை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மை வாக்கு மட்டும் வர வேண்டும் என்பதற்காக மத்தியிலிருந்து வருகின்ற திட்டத்தை கூட எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தான் மத்திய இப்பொழுது கிராமப் பகுதியில் இருக்கின்ற விவசாய தொழிலாளர்களுக்காக புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள் 125 நாள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 நாட்களாக கொண்டு வந்திருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள் முழுமையாக நமக்கு வாக்களிப்பார்கள் என்று இன்றைய தினம் அவர்கள்மக்களைப் பற்றி கவலைப்படாமல் இந்த திட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நைனார் நாகேந்திரன் ஒவ்வொரு மாவட்டமாக வந்து கொண்டிருக்கின்றார்கள். எடப்பாடி யார்ஒவ்வொரு தொகுதியாக சென்று கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்தில் 2026 நிச்சயமாக ஆட்சி மாற்றம் நடைபெறும் அண்ணன் எடப்பாடி மீண்டும் முதலமைச்சர் ஆக்கப்படுவார்கள் மீண்டும் தொழில் வளர்ச்சி அடையும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறினார்.41வது நாள் சுற்றுப்பயணமாக திருச்செங்கோடு வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேசிய போது கூறியதாவதுதமிழகம் தலைநிமிர தமிழனின் பயணமாக நாடெங்கும் சென்று அனைத்து தரப்பு மக்களின் குறை கேட்டு திட்டமிட்டு வருகிறோம் EPS தொகுதி வாரியாக பயணம் செய்கிறார். நாங்கள் மாவட்ட வாரியாக பயணம் செய்கிறோம். இன்று பியூஸ்கோயல் உடன் பேசி சிலவற்றை முடிவு செய்து வந்திருக்கிறோம். திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் நான்காண்டுகளுக்கு மேலாக எம்எல்ஏவாக இருக்கிற ஈஸ்வரன்இந்த தொகுதிக்கு என்ன செய்தார்.ஈஸ்வரன்என் நெருங்கிய நண்பர் தான்நட்பு வேறு அரசியல் வேறு இதுவரை அவர் சட்டமன்றத்தில் எதுவும் பேசவில்லை. கோவை பாலியல் பலாத்காரம் குறித்து பேட்டி கொடுத்தார். பெண் வளர்ப்பு சரியில்லை என கூறினார். குறை எந்த பக்கம் இருந்தாலும்அதை சரியாக பேச வேண்டும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் இப்படி பேசி இருக்க கூடாது. நாமக்கல் கவிஞர், TM காளியண்ணன்போன்றவர்கள் பிறந்த பூமி திருச்செங்கோடு அது தற்போது எப்படி உள்ளது என்பதற்கு 2 நிமிட வீடியோ காட்சிகாட்டுகிறேன் என கூறினார்இதனைத் தொடர்ந்து வீடியோ ஒளிபரப்பானது கிட்னி திருட்டு, திருச்சி MLA உறவினர் மருத்துவமனை மீது நடவடிக்கை இல்லை. சட்டம் ஒழுங்கு அடிப்படை வசதிகள் கெட்டு தான் உள்ளது.வாக்குறுதி 219 குளிரூட்டபட்ட முட்டை கிடங்கு, 35 ல் மரவள்ளிக்கு ஆதாரவிலை எனவாக்குறுதி அளித்தவர்கள் எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லைகோயபெல்ஸ் தத்துவத்தை கடைபிடிப்பவர் ஸ்டாலின் அன்று அதிமுக மேடையில் நாங்கள் ஒன்றாக இருந்தோம்இன்று நான் பாஜக மேடையிலும் அவர்கள் அதிமுகவில் இருந்தாலும் எங்கள் மேடையிலும் இருப்பதால் எங்களுக்குள் கூட்டணி உருவாகியுள்ளது குழந்தைகளுக்கு எதிரான குற்றம் 10 சதவீதம் கூடியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதம் கூடியுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்திற்கு கூக்குரலிட்ட திமுக ஆட்சியில் 42 லாக்கப் டெத் கிட்னி திருட்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி கிட்னி திருட்டு நடைபெறுகிறது திமுக மணல் திருடுகிறது கொல்லிமலையில் கனிம வளக் கொல்லை . அனைத்தையும் திமுகவினர் செய்கிறார்கள் இது குறித்து ஸ்டாலின் கவலைப் படுவதில்லை தன் மகன் உதயநிதியை முதலமைச்சர் ஆக்கத்தான் பாடுபடுகிறார். 14 லட்சம் கோடி மத்திய அரசு நிதி தந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் கூட்டு வைத்திருந்தால் 33 தொகுதி வெற்றி என பியூஸ் கோயல் தங்கமணியிடம் தெரிவித்தார்.ஒரு தலைபட்சமாக ஆட்சி நடத்துகிறார்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி சாமிநாதன் தீர்ப்பு. வழங்கினார். அதை மதிக்கவில்லை சுப்ரீம் கோர்ட் போகிறார்கள் அங்கும் அவர்களுக்கு அந்த தீர்ப்பை நடைமுறை படுத்த உத்தரவுவந்தும்அதனை செயல்படுத்த மறுக்கிறார்கள்.ஊரக வேலை திட்டத்தில் தவறுகள் நடக்காத வகையில் 125 நாள் வேலை பயோ மெட்ரிக் கையெழுத்து போட்டு வேலை. என உத்தரவிட்டால் அதனை எதிர்க்கிறார்கள். 100 எம்பி கையெழுத்து நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை எதிர்த்துபெற்றிருக்கிறார்கள் அது உண்மையான கையெழுத்தா என அமித்ஷா ஆய்வு செய்வதாக சொல்லி உள்ளார். கள்ளசாராய சாவு கள்ளக்குறிச்சி 65, திருவண்ணா மலை 4 பேர் சாவு கருர் 40 பேர் சாவு இரவோடு இரவாக முதல்வர் வருகிறார் காலை 5 மணிக்குள் பிரேத பரிசோதனைசெய்து முடிக்கிறார்கள் செந்தில் பாலாஜியை காப்பாற்ற துடிக்கிறார்கள். எந்த தவறும் செய்யாத சவுக்கு சங்கர் மீது பொய் வழக்குபோட்டு தடுப்பு காவல் சட்டத்தில் அடைகிறார்கள் மேலும் 2 பொய்வழக்கு யாரும் பார்க்க முடியாது,அறைக்குமுன்னால் கேமரா வைத்துள்ளனர். மாற்ற ஆடை கொடுப்பதில்லை. சவுக்கு சங்கர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது 38 வழக்குகள்போட்டிருக்கிறார்கள் பாஜக சாதாரண இயக்கம் அல்ல ஜன சங்கமாக உருவாகி வாஜ்பாய் அத்வானி போன்றவர்களால் வழக்கறி இன்று மோடி அவர்களால் உலகப் புகழ் அடைந்த மோடி அவர்களால் வெற்றி இயக்கமாகவளர்ந்துள்ளது. மோடி அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் எனக் கூறினார்.
Next Story


