மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மாற்றி அமைத்த பாஜக ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்...

X
Ranipet King 24x7 |24 Dec 2025 5:49 PM ISTவாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மாற்றியமைத்த மத்திய அரசு மற்றும் மத்திய அரசு திட்டத்திற்கு ஆதரவளித்து வரும் அதிமுகவையும் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மாற்றி அமைத்த பாஜக ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்... ராணிப்பேட்டை, மாவட்டம் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மாற்றியமைத்த மத்திய அரசு மற்றும் மத்திய அரசு திட்டத்திற்கு ஆதரவளித்து வரும் அதிமுகவையும் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சேஷா வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி சிறப்புரையாற்றினார், மேலும் சந்தேஷ்காந்தி, மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, ராணிப்பேட்டை நகர மன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, சக்திவேல் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் என ஏராளமானோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
