நெமிலி ஒன்றிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சில மாற்றங்களை செய்தும், காந்தி அவர்களின் பெயரை நீக்கி, இந்தியில் பெயர் வைத்தும் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது. மேலும் இந்த திட்டத்திற்கு விபிஜிராம்ஜி என்று பெயர் மாற்றம் செய்து நடைமுறைப்பட
நெமிலி ஒன்றிய தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சில மாற்றங்களை செய்தும், காந்தி அவர்களின் பெயரை நீக்கி, இந்தியில் பெயர் வைத்தும் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது. மேலும் இந்த திட்டத்திற்கு விபிஜிராம்ஜி என்று பெயர் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் இந்த திட்டத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெமிலி பஸ் ஸ்டாண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு யூனியன் சேர்மன் வடிவேல் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நெமிலி நகர செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சோளிங்கர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காந்தியின் பெயரை இந்த திட்டத்தில் இருந்து நீக்கியது பாஜகவின் சதியாகும். தமிழக மக்களின் வளர்ச்சியை பாஜகவோடு சேர்ந்து அதிமுகவும் தடுக்க நினைக்கின்றது. என்று நிர்வாகிகள் பேசினர். இதில் மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி நன்றி தெரிவித்தார்.
Next Story