கல்குவாரியில் திடீரென பாறைகள் சரிந்ததால் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்

பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் திடீரென பாறைகள் சரிந்தது. ஒரு ஹிட்டாச்சி வாகனமும், ஒரு லாரியும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக ஹிட்டாச்சியின் ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதார்கஷ்பசேரா
பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் திடீரென பாறைகள் சரிந்தது. ஒரு ஹிட்டாச்சி வாகனமும், ஒரு லாரியும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக ஹிட்டாச்சியின் ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதார் ஸ் பசேரா நேரில் விசாரணை* பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது அந்த வகையில், கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான உரிமம் பெற்ற கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் இன்று காலை சுமார் 8.30மணி அளவில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இதில் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மதிவாணன் என்பவருக்கு சொந்தமான ஹிட்டாச்சி வாகனத்தை சிவா என்ற ஓட்டுநர் இயக்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென பாறைகள் சரிந்து ஹிட்டாச்சி வாகனத்தின் மீதும் அருகே நின்றிருந்த லாரியின் மீதும் விழுந்ததில் ஹிட்டாச்சி வாகனமும் லாரியும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக ஹிட்டாச்சியின் ஓட்டுனர் சிவா அந்த வாகனத்தின் கண்ணாடி குத்தியதில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயமடைந்த சிவா பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ்பசேரா நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதே கல்குவாரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாறைகள் சரிந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story