கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.

கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது.
கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை திருமண்டலம் சார்பில் நூறு ஆண்டுகளை கடந்த சிஎஸ்ஐ ஹென்றி லிட்டில் நினைவாலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கிறிஸ்மஸ் திருவிருந்து வழிபாடு அதிகாலை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரைக் கவர்ந்தது. சிஎஸ்ஐ ஹென்றி ஆயர் அருள்பணி ராஜமாணிக்கம் அருள் பணி சாமுவேல் ராஜா, சேகர் ஆயர் ஆகியோரின் கூட்டுசிறப்பு ஆராதனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறப்பினை பாடல்களாக பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர். இந்த இந்த கிறிஸ்துமஸ் விழாவில் 100க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். மேலும் தேவாலய பொறுப்பாளர்கள் பல பங்கேற்று கிறிஸ்மஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
Next Story