கரூர் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு.
Karur King 24x7 |25 Dec 2025 12:37 PM ISTகரூர் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு.
கரூர் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கோவிந்தராவ் நேற்று ஆய்வு. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தத்திற்கு பிறகு அண்மையில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்திலும் வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அண்மையில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து நேற்று கரூர் மாவட்ட சிறப்பு விரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனருமான கோவிந்தராவ் கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலையில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்களுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யுரேகா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆய்வு பணிகள் நிறைவு பெற்ற பிறகு சிறப்பு தீவிர வாக்காளர் வரைவு பட்டியல் குறித்து கரூரில் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story




