அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

X
Komarapalayam King 24x7 |25 Dec 2025 7:53 PM ISTகுமாரபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே எடப்பாடி சாலை உள்ளது. பஸ் ஸ்டாண்ட் இந்த சாலையில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடப்பதால் , பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்tதில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இடைப்பாடி சாலையில் இருந்து குமாரபாளையம் வரும் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் அருகே சேலம் ரோடு சந்திப்பு வழியாக சென்று வருகிறது. அதே நேரம் பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள், மார்க்கெட் வரும் வாகனங்கள், இடைப்பாடி செல்லும் வாகனங்கள் எல்லாம் இதே சாலையில் சந்திக்கும் போது, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு போக்குவரத்து போலீசார் யாரும் நிற்பது இல்லை. இந்த இடத்தில் சிப்ட் முறையில் போக்குவரத்து போலீசார் நியமித்தால்தான், அனைத்து வாகனங்களும் எளிதாக செல்ல முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையும் இதே சாலையில் உள்ளதால், சில சமயம் அம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
Next Story
