நாமக்கல் இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழுவினர் சார்பில் அரங்கநாதர் கோயிலில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு வைபவம்!

X
Namakkal King 24x7 |25 Dec 2025 9:36 PM ISTஇந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த வளைகாப்பு வைபத்தை தொழிலதிபரும், அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளருமான ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் தொடங்கி வைத்தார்.
நாமக்கலில் ஆன்மிக இந்து சமய பேரவை திருப்பாவை குழு சார்பில், 55ம் மரகத ஆண்டு நாமக்கல் அரங்கநாதர் சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குடைவறை கோயிலான அரங்கநாதர், ரங்கநாயகி தாயார் கோயிலில் 35 கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.இந்து சமயப் பேரவை திருப்பாவைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த வளைகாப்பு வைபத்தை தொழிலதிபரும், அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளருமான ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக, மருத்துவர் சந்திரா, ஆடிட்டர் ஜெ.வெங்கடசுப்பிரமணி, ஆன்மீக இந்து சமயப்பேரவை கௌரவ தலைவர் சோழாஸ் ஏகாம்பரம், பாண்டியன் ,ஜவஹர், பாண்டியன், கமால்பாஷா, சின்னுசாமி, கோபி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஒவ்வோர் கர்ப்பிணி பெண்ணுக்கும் 5 வகையான உணவுகள் மற்றும் ஜவுளி வகைகள், வளையல்கள் வழங்கப்பட்டன. இதில், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.வளைகாப்பு வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமாக மஞ்சள் சரடு, மஞ்சள் தூள், குங்குமம், வளையல்கள், அம்மன் படம் போன்றவை வழங்கப்பட்டன,இந்து சமயப் பேரவை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
Next Story
