மீண்டும் இன்டர்நேஷனல் மேட்சில் முதல் இடத்தை பிடித்தார்

X
Pudukkottai King 24x7 |26 Dec 2025 11:41 AM ISTகிரிக்வெனிகா, குரோஷியா 12-20. டிசம்பர் 2025 *சர்வதேச செஸ் திருவிழா 2025* டிசம்பர் 12 ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி இன்று வரை குரோசியாவில் நடைபெற்று முடிந்தது....
இன்டர்நேஷனல் செஸ் டோர்னமெண்ட் 2025 அட்வென்ட்ஸ்கி சாஹோவ்ஸ்கி திருவிழா 2025 - கிரிக்வெனிகா திறந்த அட்வென்ட் செஸ் திருவிழா 2025 கிரிக்வெனிகா, குரோஷியா 12-20. டிசம்பர் 2025 சர்வதேச செஸ் திருவிழா 2025 டிசம்பர் 12 ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி இன்று வரை குரோசியாவில் நடைபெற்று முடிந்தது.... அந்த போட்டியில் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலய ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளிஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் P. D. இமான் அவர்கள் விளையாடினார்.... அங்கு நடைபெற்ற போட்டியில் உலக நாடுகள் கலந்து கொண்டன... அமெரிக்கா, துருக்கி,கிரீஸ்,லாத்வியா, ஸ்லோவேனியா, சிங்கப்பூர், இத்தாலி, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து சுமார் 100 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்..... இதில் ஒன்பதுக்கு எட்டு (8/9) என்ற விகிதத்தில் வெற்றி பெற்று 124புள்ளி கூடுதல் பெற்று முதலாவது இடத்தை* தக்க வைத்து .... 400 யூரோ(40,000) முதல் பரிசு பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து உள்ளார்.... இந்தப் போட்டியில் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர் நிலைப் பள்ளியின் செயலர் மதிப்பிற்குரிய திரு ராஜ்குமார் விஜயகுமார் தொண்டைமான் அவர்கள் வாழ்த்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சித சேகர் அவர்களும் ஹட்சன் செஸ் அகடாமி பயிற்சியாளர் GM விஷ்ணு பிரசன்னா தந்தை பீர்முகமது தாயார் தீபா மற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் உறவினர்கள் பாராட்டினார்கள். இந்தியாவிலிரிந்து கலந்து கொண்ட அந்த மாணவனை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் நல்லாசிரியர் க.முத்துராமலிங்கம் அவர்களும் பாராட்டினார்.
Next Story
