புளியங்குடியில் வாறுகாலில் இறந்து கிடந்த ஓட்டுநர் போலீஸ் விசாரணை

புளியங்குடியில் வாறுகாலில் இறந்து கிடந்த ஓட்டுநர் போலீஸ் விசாரணை
X
புளியங்குடியில் வாறுகாலில் இறந்து கிடந்த ஓட்டுநர் போலீஸ் விசாரணை
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணியை பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் அமர்நாத் பிரபாகரன் (25) கார் ஓட்டுநரான இவர் இதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அமர்நாத் பிரபாகரன் சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார் ஓட்டுநரான அமர்நாத் பிரபாகரன் சென்னையில் இருந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சொந்த ஊரான சிந்தாமணிக்கு வந்துள்ள இவர் நேற்றைய தினம் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீடு திரும்பியதாக கூறப்படும் நிலையில் வீட்டின் அருகில் உள்ள வாறுகாலில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இருந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து இறந்த அமர்நாத் பிரபாகரனின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான வீட்டிற்கு எடுத்துச் சென்ற நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தகவல் அறிந்து சென்ற புளியங்குடி காவல்துறையினர் இறந்த கார் ஓட்டுநனரில் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் கார் ஓட்டுனர் வாறுகாலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இதே பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுனர் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்டதும். இதே போன்று கார் ஓட்டுநர் ஒருவர் மர்மான முறையில் வாறுகாலில் இறந்து கிடந்ததும், இந்த அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story