தரமான பொருட்களைக் கொண்டு சத்துணவு தயாரிக்க வேண்டும். கரூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுகன்யா சமையலர்களுக்கு விளக்கம்.
Karur King 24x7 |26 Dec 2025 3:15 PM ISTதரமான பொருட்களைக் கொண்டு சத்துணவு தயாரிக்க வேண்டும். கரூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுகன்யா சமையலர்களுக்கு விளக்கம்.
தரமான பொருட்களைக் கொண்டு சத்துணவு தயாரிக்க வேண்டும். கரூரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சுகன்யா சமையலர்களுக்கு விளக்கம். கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பில் சிறப்பு முகாம் கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகன்யா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் சத்துணவுத் துணை வட்ட வளர்ச்சி அலுவலர்கள், சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் சமையலர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சத்துணவு வழங்கும்போது மாணாக்கர்களுக்கு தரமான உணவு பொருட்களைக் கொண்டு சுகாதாரமான உணவு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து சுகன்யா சமையலர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது சமையலுக்கு தேவையான காய்கறிகளை கொள்முதல் செய்யும் போது புதிதான தோற்றத்துடன் கவர்ச்சியாக தெரியும் காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டுமா? அல்லது பூச்சிகள் தாக்கிய காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டுமா என சமையல் செய்யும் பெண்களிடையே கேள்வி எழுப்பினார். அப்போது கவர்ச்சியாக உள்ள காய்கறிகளை தான் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த சுகன்யா தரமான காய்கறிகள் இருந்தால் தான் பூச்சிகள் கூட அதனை உண்பதற்கு விரும்பும். ஆனால் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட காய்கறிகளில் பூச்சிகளின் தாக்கம் இருக்காது என விளக்கம் அளித்தார்
Next Story




