லாரி மோதியதில் வாலிபர் படுகாயம்

X
Krishnarayapuram King 24x7 |26 Dec 2025 7:41 PM ISTலாலாபேட்டை போலீசார் விசாரணை
கரூர் மாவட்டம்,தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் மாதேஸ்வரன்(27). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் லாலாபேட்டையை அடுத்த மகாதானபுரம் பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மாதேஸ்வரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து லாரி டிரைவர் விஸ்வநாதன் என்பவரை லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
