எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்..

எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்..
X
எம்பி ராஜேஷ்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்..
நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியை சேர்ந்த தேமுதிக, பாஜக நிர்வாகிகள் பலர் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனர். நாமக்கல் மாவட்ட தேமுதிக இளைஞர் அணி துணை அமைப்பாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான எம்.ஜெகதிஸ் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி 10 பேர், பாஜகவிலிருந்து விலகிய 5 பேர் என பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். இவர்களுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சால்வை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமகிரிப்பேட்டை பேரூர் திமுக செயலாளர் அன்பழகன், மாவட்டத் திமுக பொருளாளர் ஏ.கே.பாலசந்தர், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார், வார்டு செயலாளர்கள் சுந்தரவேல், பாபு, பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story