விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 டிசம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 70 மி.மீ., பெய்த மழையளவு 40.73 மி.மீ, ஆகும். 2025 டிசம்பர் வரை பெய்ய வேண்டிய மழையளவு 861 மி.மீ., பெய்த மழையளவு 737.10 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் இன்று (26.12..2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு.ராஜு அவர்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் மாட்டு கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்காசோளத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், கை.களத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். திரு.விசுவநாதன் நிலக்கடலையில் புது இரகங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டுமெனவும், கொட்டரை நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரினை விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திரு.தனராஜ் பேசுகையில் மருதடியில் உள்ள ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தட்கல் திட்டத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திரு.நீலகண்டன் அவர்கள் பேசுகையில் பூலாம்பாடி யில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்காச்சோளத்தில் வேரழுகல் நோயினை முன்கூட்டியே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திரு.கண்ணபிரான் அவர்கள் மாவட்டத்தில் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எளம்பலூர் ஏரியில் தடுப்பணை கட்டி ஏரி சீரமைத்து தர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். திரு.செல்லதுரை அவர்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியும் மற்றும் நிலுவை ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பால் உற்பத்தியாளர்களுக்கு மானியத்தில் மாட்டு தீவனம் மற்றும் மாட்டு கொட்டகை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திரு.டி கே.ராமலிங்கம் அவர்கள் அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திரு. ராஜா, தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படும் விதை வெங்காயத்திற்கு மாற்றான இடு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திரு. சத்தியசீலன் அவர்கள் வேப்பூர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்திட வேண்டும் எனவும், காடூரில் கால்நடை மருத்துவமனை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். திரு. விவேகானந்தன் பேசுகையில் சதாசிவ அணைக்கட்டு பணிகள் நிறைவு பெற்றமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அரும்பாவூர் பகுதியில் உள்ள பொது மயானம் சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திரு மணி விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிப்படைவதை தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திரு.ராமராஜன் பேசுகையில் கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு செங்குணம் பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கொட்டரை நீர்தேக்கத்தில் கிளை வாய்க்கால்கள் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது – பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 டிசம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 70 மி.மீ., பெய்த மழையளவு 40.73 மி.மீ, ஆகும். 2025 டிசம்பர் வரை பெய்ய வேண்டிய மழையளவு 861 மி.மீ., பெய்த மழையளவு 737.10 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல்லில் 28.185 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், சிறுதானியங்களில் 1.963 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், பயறு வகைகளில் 4.558 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், எண்ணெய்வித்து பயிர்களில் 5.562 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பரப்பு அதிகரித்தல், சிப்பம் கட்டும் அறை அமைக்கும் பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக் கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது எனவும், மருதடி பகுதியில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிர்வாக காரணங்களுக்காக மாவட்ட மின்சார துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் துணை பிரிவு அலுவலகங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண்மை துணை இயக்குநர் ச.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே), பொ.ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story