தென்காசியில் வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு முகாம்

X
Tenkasi King 24x7 |26 Dec 2025 10:03 PM ISTதென்காசியில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்
தென்காசி நகர SDPI கட்சியின் சார்பில் 22வது வார்டுக்குட்பட்ட பூத் எண் :105 , புதுமனை 2 ஆம்தெரு, எஜமான் தெரு ஆகிய பகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் விடுபட்ட வாக்காளர்களுக்கு புதிதாக விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல் முகாம் பூத் (BLA -2 ) பொறுப்பாளர் முகம்மது அசன்தலைமையில் நடைபெற்றது. முகாமில் ஏராளமான வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டது. முகாமில் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத்,தொகுதி துணைத்தலைவர் பாதுஷா, தொகுதி அமைப்பு செயலாளர் செயலாளர் அப்துல்காதர் @அபு, நகர இணைச்செயலாளர் ஜாஹிர்ஹுசைன், நகர பொருளாளர் அஹமதுகபீர்,நகர செயற்குழு உறுப்பினர் ஜமால்மைதீன் மற்றும் BLA -2 பொறுப்பாளர்கள் ரஹ்மத்துல்லாஹ், சுல்தான்,சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
