தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சரத்குமார் பரபரப்பு பேட்டி

X
Tenkasi King 24x7 |27 Dec 2025 9:48 AM ISTதென்காசி மாவட்டம் புளியங்குடியில் சரத்குமார் பரபரப்பு பேட்டி
விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது :சரத்குமார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்றார் நடிகர் சரத்குமார். தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி பகுதியில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு சிம்சோன் கபடி குழு போட்டிகள் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்க திரைப்பட நடிகர் சரத்குமார் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது; நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை. ஏனென்றால் நான் பிரசாரம் செய்த காலத்தில் எனக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறி இருந்தால் நிச்சயம் அந்த கட்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் ,நடிகர் அஜித் ஆகியோர் சென்றால் அதைவிட அதிக கூட்டம் வரும். இன்று என்னை வரவேற்பதற்கு கூட அதிக அளவில் கூட்டம் கூடியது தென்னிந்தியாவின் மத கலவரங்கள் வந்தது கிடையாது. இஸ்லாமியர்கள் படை எடுத்து வந்த காலங்களில் மட்டும் தான் அது போன்ற மத கலவரங்கள் நடந்தன. அதன்பின் மத கலவரங்கள் நடைபெறவில்லை. மக்களை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களை சிலர் கூறுகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக அதிகரித்ததற்கும் திமுக கூட்டணி கட்சி போராட்டம் நடத்துகிறது. ஒரு மாநிலம் இதை சிறப்பாக செயல்படுத்த முடியும். சவுக்கு சங்கர் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கூறியதற்கு தமிழக அரசு உரிய பதில்களை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். தென்காசி தொகுதியில் நான் நிற்பது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். அதன் பின்னர் போட்டியிட வேண்டுமா வேண்டாமா என நான் முடிவு செய்ய வேண்டும் அது குறித்து இரண்டு மாதம் கழித்து தான் கூற முடியும். நடிகராகிய நான் அடிக்கடி வரும் பொழுதே என்னை பார்க்க பெருங்கூட்டம் வருகிறது .அப்படி என்றால் வெளியே வராத மக்களை எப்பொழுதுமே நேரில் சந்திக்காத நடிகர் ஒருவர் தெருவில் வரும் பொழுது கூட்டம் அதிகமாக தான் வரும். தேர்தல் நேரத்தில் பாஜகவின் சி-டீம் என தேவையில்லாமல் பேசுவது வழக்கமாகி விட்டது தமிழக வெற்றி கழகத்துடன் பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என கருதுகிறேன். அதிமுக வினர் அனைவரும் இணைந்தால் நல்லது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த தேசத்தை சிறப்பாக வழிநடத்தக்கூடிய தலைவர் நமக்கு கிடைத்துள்ளார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது என்றார். தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் ஐயா சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story
