விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை காவல்துறை விசாரணை

X
Kangeyam King 24x7 |27 Dec 2025 10:56 AM ISTகாங்கேயம் நத்தக்கடையூர் அருகே உடல்நலக் குறைவு காரணமாக வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்
காங்கேயம் நத்தக்கடையில் அருகே உள்ள பழைய வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 75 ,இவரது மனைவி நல்லம்மாள் 70 இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு பின்னர் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சுப்பிரமணி மற்றும் நல்லம்மாள் ஆகியோர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story
