அறந்தாங்கி அருகே விபத்தில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கிய லாரி

அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு பகுதியில் செங்கல் ஏற்றி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் லாரி அப்பளம் போல் நொறுங்கியது
சேலம் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பெருங்காடு பகுதிக்கு ஒரு லாரியில் ஆயிரக்கணக்கான செங்கல்கள் ஏற்றப்பட்டு லாரி வந்து கொண்டிருந்தது. இப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி அப்பளம் போல் நொறுங்கியது. இருந்த போதிலும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.இச்சம்பம் குறித்து ஆவுடையார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல் லாரி விபத்தில் சிக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story