ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகர் திரிபுரம் எரித்த மூர்த்தியாக வீதியுலா

Aranthangi King 24x7 |27 Dec 2025 11:49 AM ISTஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில். மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட இக்கோவிலில் நடைபெற்று வரும் மார்கழி திருவாதிரை திருவிழாவில் மன்னர் மணிவாசகர் 4 ஆம் நாள் காலை திரிபுரம் எரித்த மூர்த்தியாக விதியுலா வந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில் புராதானச் சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. இக்கோவில் பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருவாதவூரார் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, மாணிக்கவாசகர் பெயர் கொண்டு, ஆத்மநாதசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார். மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றிய தலமான ஆவுடையார்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி திருமஞ்சனம் என 2 திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இங்கு இறைவனுக்கு திருவிழா நடைபெறாமல் தொண்டனுக்கு அதாவது மாணிக்கவாசருக்கே திருவிழா நடக்கிறது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் மார்கழி திருவிழாவின் 4 ஆம் நாளான இன்று காலை உற்சவர் மாணிக்கவாசகர் திரிபுரம் எரித்த முர்த்தியாக வீதியுலா வந்தார்.
Next Story
