திண்டுக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வு

Dindigul
திண்டுக்கல் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து அதிகாரிப்பட்டி சமுதாயகூடத்தில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழந்தை திருமணம், கடத்தல், POCSO சட்டம், சைபர் குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் காவல் உதவி எண்கள் 1098,1930 குறித்து எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் புறநகர் DSP.சங்கர், சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வேலுமணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆய்வாளர் அருணா உஷாநந்தினி, சைபர் கிரைம் காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் ஈஸ்வரி, ஆசிரியர்கள், காவலர்கள்,பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .
Next Story