அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு

அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபாடு
X
மார்கழி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அழியாநிலையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.இக்கோவிலில் மார்கழி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story