மக்கள் உரிமை மாநாட்டிற்கு அழைப்பிதழ்

X
Dharampuri King 24x7 |27 Dec 2025 1:45 PM ISTஉரிமைகள் மீட்பு மாநாடு
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தர்மபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் உரிமை மாநாட்டிற்கு அழைப்பிதழை வழங்கினர். தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல் தலைமையில் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பிரபு முன்னிலையில் வரும் 28-ம் தேதி கேப்டனின் இரண்டாம் ஆண்டு குருபூஜை மற்றும் வரும் 9 தேதி கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாநாட்டிற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை இன்று சந்தாரப்பட்டி பகுதியில் வழங்கினர். உடன் மாவட்ட துணைச் செயலாளர் பெரியசாமி மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம் ஒன்றிய பொருளாளர் ராமன் ஒன்றிய துணைச் செயலாளர் ஆர் பி எஸ் செந்தில் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் சக்தி சிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
