கூடலூர் ஊராட்சியில் புதிய பேருந்து சேவை

சங்காயபட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த எம்எல்ஏ
கரூர் மாவட்டம், குளித்தலையிலிருந்து கூடலூர் பஞ்சாயத்து ஆதனூர் சங்காயப்பட்டி வழியாக மணப்பாறை செல்லும் நகர பேருந்து சேவை துவக்க விழா இன்று சங்காயப் பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நகர பேருந்து சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார். அவருடன் குளித்தலை போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், முன்னாள் கூடலூர் பஞ்சாயத்து தலைவர் அடைக்கலம், மற்றும் திமுக நிர்வாகிகள் போக்குவரத்து கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story