கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மாணாக்கர்கள் நேரடி மோதல் காட்சிகளால் பார்வையாளர்கள் பரவசம்.

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மாணாக்கர்கள் நேரடி மோதல் காட்சிகளால் பார்வையாளர்கள் பரவசம்.
கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் மாணாக்கர்கள் நேரடி மோதல் காட்சிகளால் பார்வையாளர்கள் பரவசம். கரூர் ஸ்ரீ சாய் பாக்சிங் சங்கம் சார்பாக 4-வது மாநில அளவிலான பாக்சிங் போட்டி கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளியில் இன்று துவங்கியது. இன்று துவங்கி நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் மாணாக்கர்கள் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கரூர் ஸ்ரீ சாய் பாக்சிங் சங்க தலைவர் சுசில் குமார், செயலாளர் அசோக் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் மோதிக் கொண்டு மாணாக்கர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் தங்களது திறன்களை வெளிப்படுத்திய காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இந்த போட்டியில் கரூர் மாவட்ட விளையாட்டு துறை பேராசிரியர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் கோப்பைகள் பதக்கங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் தங்கும் வசதி மற்றும் உணவுகளை ஸ்ரீ சாய் பாக்சிங் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story