சீமான் ஒரு கிறிஸ்தவர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இவர்களை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர்
Perambalur King 24x7 |27 Dec 2025 10:59 PM ISTஅன்னமங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு உற்சாக வரவேற்பு
சீமான் ஒரு கிறிஸ்தவர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இவர்களை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர் சீமானும்,விஜயும் வலிமைபெற்றால் பிஜேபி வலிமைபெறும்,இவர்களை தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்தால் ஆர்.எஸ்.எஸ்- யை ஆதரிப்பாதாகதான் அர்த்தம்.,என் 40 ஆண்டுகால அரசியல் அனுபத்தில் இருந்து தெளிவான முடிவில் உணர்ந்து சொல்கிறேன். - பெரம்பலூர் அருகே அன்னமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் விசிக தலைவரும்,சிதம்பரம் எம்.பியுமான தொல்.திருமாவளன் பேச்சு. பெரம்பலூர் மாவட்ட அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள இளைஞர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட அம்பேத்கர் படிபகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் முன்னிலையில் எம்.பி. திருமாவளவன் உரையாற்றினார். இதில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் படிப்பகம் அமைக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக. இந்த கிராம இளைஞர்கள் அம்பேத்கர் பெயரில் படிபத்தை அமைத்துள்ளதற்காக பாரட்டிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து தற்போது நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் வட மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும் மதவாத கும்பல்களும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களும் கொடுத்த தொந்தரவுகளை விளக்கி பேசிய அவர் இதேபோல தமிழ்நாட்டிலும் கிறிஸ்த்தவ,இஸ்லாமியர்களிடையே தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாக தெரிவித்தார். சீமான் ஒரு கிறிஸ்தவர் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் கிறிஸ்தவர்கள் இவர்களை ஆதரிக்கும் மன நிலையில் உள்ளனர் தற்போது சீமானும்,விஜயும் பாஜகவின் கொள்கையாகவே மாறியுள்ளதாகவும்,அவர்களை ஆதரிப்பது பாஜகவை ஆதரிப்பதாகும்,அவர்கள் தமிழ்நாட்டில் வலிமையடைந்தால் ஆர்.எஸ்.எஸ். வலிமையடையும் என்பதை மக்கள் உணரந்து செயல்படும் நேரமிது என்றார். இதை தனது நாற்பது ஆண்டு கால அரசியல் அனுபத்தில் இருந்து நன்கு உணர்ந்து தெரிவிப்தாக உரையாற்றினார். மேலும் சினிமா மோகத்தில் விஜயின் பக்கமும் தமிழில் பேசுகிறார் என்று சீமான் பக்கமும் இளைய தலைமுறை செல்வதற்கு முன்பு நன்கு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். தொடர்ந்து பெரியாரை அவமதித்து அம்பேத்கரை ஆதரித்து இருவரும் வேறு என பேசுவதே பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் நன்கு உணர வேண்டும் என்றார்.
Next Story



