ஐடிஐ நிறுவனங்களில் வெல்டிங் தொழில் கற்க மாணவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும் மின்கட்டண மானியம் வழங்க வேண்டும்தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் நல சங்கதலைவர் அரசுக்குகோரிக்கை
Tiruchengode King 24x7 |28 Dec 2025 3:00 PM ISTஅரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் (ITI)வெல்டிங் தொழில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.மின்சாரத்தை மட்டுமே நம்பி தொழில் செய்யும் எங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப் படுவதை போல மின்கட்டண மானியம் வழங்க வேண்டும்தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் நலச்சங்கதலைவர்வெங்கடேஸ்வரன் அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் திருச்செங்கோடு இன்ஜினியரிங் கிரில் ஒர்க் நலச்சங்கம் ஆகியவை நடத்திய 2025 ஆம் ஆண்டு பொது உறுப்பினர் கூட்டம் மலையடிவாரம் விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்செங்கோடு சங்க தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். செயலாளர் செல்வகுமார் பொருளாளர்சண்முகம் கமிட்டி உறுப்பினர்கள் கந்தசாமி ஜோதிமணி ரஞ்சித் மனோகர்ஆகியோர் முன்னிலை வைத்தனர்கூட்டத்தில் ஒயர் மட்டக்குழு உறுப்பினர் ராஜா விழுப்புரம் மாவட்ட செயலாளர் குமரவேல் கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் பாலமுரளி ஈரோடு மாவட்ட செயலாளர் சசிகுமார்உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராகதமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசியபோது தொழிலாளர் நல வாரியத்தில் நம்மை இணைக்க கட்டுமான தொழிலாளராக ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு அமைச்சர் தாமோ அன்பரசனிடம் பேசியபோது நீங்களெல்லாம் உரிமையாளர்கள்தொழிலாளர்களுக்கு தான் நல வாரியம் எனக் கூறினார்.நமது சங்கத்தின் பெயரில்தான் இந்தப் பிரச்சனை என்பதை உணர்ந்து தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கம் என பெயர் மாற்றியுள்ளோம் விரைவில் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் நல வாரியத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்.என பேசினார் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேசன் கூறியதாவது தமிழ்நாடு வெல்டிங் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் திருச்செங்கோடு அமைப்பு சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெறுகிறது இந்த கூட்டத்தில் நாங்கள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் வெல்டிங் தொழில் ஆள் பற்றாக் குறையால்மிகவும் சிரமத்தில் உள்ளது எனவே ஐடிஐயில் படிக்க வரும் மாணவர்கள் வெல்டிங் தொழிலை தேர்ந்தெடுக்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி எங்களுக்கான தொழிலாளர்களை அதிகப்படுத்தி தர வேண்டும்.மேலும் விவசாயிகள் இலவச மின்சாரம் பெறுவது போல் மின்சாரத்தை நம்பியே தொழில் செய்யும் வெல்டிங் தொழிலாளர்கள் பலனடையும் வகையில் மின்சாரத்திற்கு மானியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story


