கரூரில் ஐயப்ப சேவா பரிவார் கருத்தரங்கம் குருபுரஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
Karur King 24x7 |28 Dec 2025 4:54 PM ISTகரூரில் ஐயப்ப சேவா பரிவார் கருத்தரங்கம் குருபுரஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கரூரில் ஐயப்ப சேவா பரிவார் கருத்தரங்கம் குருபுரஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட கூட்டரங்கில் அகில பாரதிய ஐயப்பதர்ம பிரச்சார சபா தமிழ் மாநில அமைப்பின் ஐயப்ப சேவா பரிவார் கருத்தரங்கம் மற்றும் குருபுரஸ்கார் விருது வழங்கும் விழா சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன், தமிழ் மாநில தலைவர் பார்த்தசாரதி, தேசிய தலைவர் அய்யப்ப தாஸ், அறக்கட்டளை செயலாளர் வெங்கடேசன், தமிழ் மாநில செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த குருசாமிகள் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சியில் சுவாமி ஸ்ரீ ஐயப்பன் வரலாறு பற்றி விளக்கி பேசுதல், சபரி யாத்திரை செல்வதினால் ஏற்படும் நன்மைகள், யாத்திரை செல்லும் போது மேற்கொள்ளும் விரதம் மற்றும் இறை பயணத்தின் போது செய்யக்கூடாத செயல்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும் சுவாமி ஸ்ரீ ஐயப்பனின் வரலாறு குறித்தும் விளக்கி பேசினர். ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும், சபரிமலை யாத்திரையின் போது குருசாமியின் வழிகாட்டுதலை முறையாக பின்பற்ற வேண்டும் போன்ற விளக்கங்களை அளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல வருடங்களாக சபரிமலைக்கு சென்று வரும் குரு சாமிகளை கௌரவிக்கும் விதமாக குரு சுவாமிகளுக்கு குரு புரஸ்கார் விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். விருதுகளை பெற்றுக் கொண்ட குருசாமிகள் சபரிமலை யாத்திரையின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஐயப்பன் திருவருளால் பெற்ற பலன்களையும் கூறி அனைவரும் ஐயப்பனின் அருளைப் பெற தொடர்ந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story







