மணமேல்குடி பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

மணமேல்குடி பகுதியில் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் வனத்துறையினருடன் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வனத்துறை, புதுக்கோட்டை வனக்கோட்டம் , அறந்தாங்கி வனச்சரகத்தின் சார்பில், பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அறந்தாங்கி வனச்சரக அலுவலர் து.மணி வெங்கடேஷ் அவர்களின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இப்பணியில், ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில இயங்கி வரும், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை அவர்களின் அறிவுறுத்தலின்படி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், கெளதம்பாரதி, லெட்சுமணன், சபுருதீன், ராஜதுரை,அஸ்வின், ஐயப்பன், கோபிகிருஷ்ணன், காளீஸ்வரன்,சதீஷ்வரன், வினித் ஆகிய நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ மாணவர்கள் 10 பேர் பங்கேற்றனர், கட்டுமாவடி, முத்துக்குடா கடற்கரை பகுதிகளிலும், மணமேல்குடி தாலுகா கீரனூர், வெள்ளூர் மற்றும் கரகத்திகோட்டை கண்மாய்ப்பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் அறந்தாங்கி வனச்சரக அலுவலர்கள், மற்றும் வனவர்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story