காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
X
காங்கேயத்தில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா காங்கேயத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பழம் உள்ளிட்ட சிற்றுணவை வழங்கப்பட்டது
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனின் பிறந்தநாள் விழா காங்கேயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காங்கேயத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ரொட்டி, பால், பழம் உள்ளிட்ட சிற்றுணவை தமாகா கட்சியின் மாநில பொதுச் செயலர் விடியல் எஸ்.சேகர் வழங்கி, உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தமாகா கட்சியின் காங்கேயம் வட்டாரத் தலைவர் தர்மராஜ், மாவட்டத் தலைவர் சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, வட்டார துணைத் தலைவர் மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story