நாமக்கல் மாயம்பிள்ளையார் கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் அசத்தல் !

நாமக்கல் மாயம்பிள்ளையார் கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து: எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் அசத்தல் !
X
நாமக்கல் சுற்று வட்டாரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள், பொதுமக்கள் என 7000க்கும் மேற்பட்டோர் கிடா விருந்தில் கலந்து கொண்டனர்.விருந்தில் ஆட்டிறைச்சி, கோழி,மீன் மற்றும் முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்று, தமிழக முதல்வராக மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள மாயம் பிள்ளையார் கோயிலில் நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் சார்பில் கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது.நாமக்கல் மாநகர அதிமுக செயலாளராக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் நாமக்கல், சேலம் ரோட்டில் உள்ள மாயம் பிள்ளையார் கோயிலில் உள்ள கருப்பணார் கோயிலில் கிடா வெட்டி விருந்து படைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட நாமக்கல் அதன் சுற்று வட்டாரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள், பொதுமக்கள் என 7000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருந்தில் ஆட்டிறைச்சி, கோழி, மீன் மற்றும் முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
முன்னதாக மாயம் பிள்ளையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் கூறுகையில், வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோயிலில் பூஜை செய்து விருந்து வைக்கப்பட்டது என்றார்.
Next Story