நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சம்
Perambalur King 24x7 |28 Dec 2025 11:06 PM ISTபெண்கள் வீட்டில் இருந்தபோது திடீரென லேசான நில அதிர்வு போல (வைப்ரேஷன்) ஏற்பட்டது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இதனை உணர்ந்தோம், இதுகுறித்து பக்கத்து வீடுகளில் விசாரித்த போது அவர்களும் அது போன்ற ஒரு அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சி வடக்கு மாதவி சாலையில் உள்ள குபேரன் நகர், திருமலை நகர், முல்லை நகர் மற்றும் முகமது நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று இரவு சுமார் 7 மணி அளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து விசாரித்த போது, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வீட்டில் இருந்தபோது திடீரென லேசான நில அதிர்வு போல (வைப்ரேஷன்) ஏற்பட்டது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் இதனை உணர்ந்தோம், இதுகுறித்து பக்கத்து வீடுகளில் விசாரித்த போது அவர்களும் அது போன்ற ஒரு அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்தனர். இது மட்டும் இன்றி அக்கம் பக்கத்தில் உள்ள பகுதிகளில் விசாரித்த போது அதுபோன்ற அதிர்வு தங்கள் வீடுகளிலும் இருந்ததாக தெரிவித்ததாக கூறினர். இந்த பகுதிகளுக்கு அருகே சுமார் 500 மீட்டர் தொலைவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அதனுடைய தாக்கமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் இது உண்மையில் நில அதிர்வு தானா அல்லது வேறு ஏதேனும் வாகனங்கள் சென்றது அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தின் அதிர்வா என்பது குறித்து பெரம்பலூர் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் விசாரித்து வருகின்றனர். இது சம்பவத்தினால் பெரம்பலூர் வடக்கு பகுதியில் சாலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story


