வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அம்பேத்கர் திருவுருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரை
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வு எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வெங்கலம் கிராமத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்ட அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரம்பலூர் மாவட்டத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்பாக திருமாவளவன் அவர்களுக்கு சாலை முழுவதும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்த மகளிர் மற்றும் வெங்கலம் கிராம மக்கள். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மண்டல செயலாளர் கிட்டு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் மண்டல செயலாளர் ஸ்டாலின் துறையூர் மண்டல துணைச் செயலாளர் லெனின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினவேல் கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் முன்னாள் மாவட்ட செயலாளர் தங்கதுரை, தமிழ் மாணிக்கம், உள்ளிட்ட விடுதலை இயக்கம் மகளிர் சங்க நிர்வாகிகள் மற்றும் வெண்கலம் கிராமத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் பொதுமக்கள் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
Next Story