குளித்தலையில் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு அம்மன் குடிபுகும் நிகழ்ச்சி
Kulithalai King 24x7 |29 Dec 2025 6:35 AM ISTவழி நெடுகிலும் பொதுமக்கள் இளநீர் கொண்டு பூஜை
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே பகவதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ கருப்பணசுவாமி கோவில் திருவிழா நிகழ்ச்சி 4 நாட்கள் நடைபெறுகிறது. மூன்றாம் நாளான நேற்று இரவு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவிலில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் புறப்பட்டு பகவதி அம்மன் கோவில் தெரு, சபாபதி நாட்டார் தெரு, காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக பெரியபாலம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சென்று முக்கிய வீதிகளில் உலா வந்து மீண்டும் பகவதி அம்மன் கோவிலில் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழி நெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் பழம் இளநீர் கொண்டு பூஜை செய்து வழிபட்டனர்
Next Story






