திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலம்

திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலம்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திருப்பாவை முற்றோருதல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு ஊர்வலம் சென்று ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்., ஊர்வலத்தை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கழக மகளிர் அணி துணைச் செயலளார் சந்திரபிரபா முத்தையா கொடியசைத்து துவக்கி வைத்தார்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற முப்பதும் தப்பாமே எனப்படும் திருப்பாவை முற்றொருதல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு ஸ்ரீ ஆண்டாளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். 108 திவ்ய தேசங்களில் பிரதானமாக விளங்கக்கூடியதாகவும் ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஊராக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஸ்ரீ ஆண்டாள் நோன்பு நோற்கும் வைவமான திருப்பாவை விழா பல்வேறு தரப்பினர் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம்.அதன் அடிப்படையில் கோதை ஆண்டாள் தொண்டர் குழாம் சார்பில் இன்று 7 ஆம் ஆண்டு திருப்பாவை முற்றோருதல் விழாவான முப்பதும் தப்பாமே நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ஆண்டாள் கோவில் முன்பு அமைந்துள்ள திருவடிப்பூர கொட்டகையில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சீர்வரிசை ஊர்வலமானது நகரின் நான்கு ரத வீதிகள் வழியாக உலா வந்தது ஊர்வலத்தை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான சந்திரபிரபா முத்தையா கொடியசைத்து துவக்கி வைத்தார் சீர்வரிசை ஊர்வலமானது ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலை வந்தடைந்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு சமர்ப்பிப்பதற்காக ஆப்பிள், மாதுளை, வாழைப்பழங்கள் மற்றும் முந்திரி உள்ளிட்ட பொருட்களை தட்டுகளில் வைத்து தலையில் மீது வைத்துக் கொண்டு ஊர்வலமாக சுற்றி வந்தனர். ஊர்வலத்தில் நிறைவில் வரிசையாக கோவிலுக்கு சென்ற பெண்கள் கர்ப்பகிரகத்தில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு தங்களின் சீர்வரிசை பொருள்களை வழங்கி ஆசி பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பிரசாத பைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story