தகனமேடை இல்லாததால் திறந்தவெளியில் இறந்தவர்கள் உடலை எரிக்கும் அருந்ததியர் காலனி மக்கள்...

X
Srivilliputhur King 24x7 |29 Dec 2025 9:48 AM ISTவத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் கிராமத்தில் தகனமேடை இல்லாததால் திறந்தவெளியில் இறந்தவர்கள் உடலை எரிக்கும் அருந்ததியர் காலனி மக்கள். சுற்றுச்சுவர், தகன மேடை அமைத்து தர கோரிக்கை
வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் கிராமத்தில் தகனமேடை இல்லாததால் திறந்தவெளியில் இறந்தவர்கள் உடலை எரிக்கும் அருந்ததியர் காலனி மக்கள். சுற்றுச்சுவர், தகன மேடை அமைத்து தர கோரிக்கை ... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சேதுநாராயணபுரம் கிராமத்தில் 4 வது வார்டு அருந்ததியர் காலணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் தகன மேடை இல்லை என்பதால் திறந்தவெளியில் பல வருடங்களாக இறந்தவர்கள் உடலை எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இதனால் மழைக்காலங்களில் சலதத்தை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், திறந்தவெளியில் சடலத்தை புதைக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் சுடுகாட்டிற்குள் தண்ணீர் அதிகமாக இருந்தால் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் , சுடுகாடு பகுதியில் எவ்வித பாதைகளும் சரியாக இல்லை என்பதால் மிகுந்த சிரமத்துடன் தான் சடலத்தினை கொண்டு செல்லும் நிலையும் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர் . இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வகை நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டும் சேதுநாராயணபுரம் அருந்ததியர்காலனி மக்கள் தங்களுக்கு சுற்றுச் சுவர் மற்றும் தகனம் மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
