கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் கைது
Srivilliputhur King 24x7 |29 Dec 2025 9:52 AM ISTஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற இரண்டு பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற இரண்டு பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தேவர் தெருவில் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தனியார் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே அய்யம்பட்டி தேவர் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி சத்யா (39) சுந்தரம் என்பவரது மனைவி மாரியம்மாள் (58 ) ஆகிய இருவரும் சந்தேகப்படும்படி நின்றுள்ளனர் இவர்களைப் பிடித்து விசாரணை செய்த போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது இவர்களிடமிருந்து 60 கிராம் கஞ்சா மற்றும் 35,310 ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story


