கரூர் அருகே இந்து கோவில் அருகே கிறிஸ்த்துவ மயானம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

கரூர் அருகே இந்து கோவில் அருகே கிறிஸ்த்துவ மயானம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
கரூர் அருகே இந்து கோவில் அருகே கிறிஸ்த்துவ மயானம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா‌ குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி , வள்ளிபுரம், காளிபாளையம், தழையூத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதியில் இந்துக்கள் நூறு குடும்பங்கள் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவதாகவும், அவர்கள் வசிக்கும் பகுதியில் ஓர் எல்லை கருப்பண்ணசாமி கோவில் அமைத்து ஆண்டுதோறும் வழிபாடு செய்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு இறுதி காரியம் செய்ய வேண்டுமென்றால் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தான் மயானத்தில் இறுதி காரியங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்கள் வசிக்கும் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடுகாடு அமைப்பதற்காக நேற்றைய தினம் அப்பகுதியில் நில அளவீடு செய்தும் இடத்தை சுத்தம் செய்தும் அரசு துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் அரசின் உத்தரவு படியே இடுகாடு அமைக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியுற்ற கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்கள் பகுதியில் கிறிஸ்துவ இடுகாடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இது தொடர்பாக கரூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சக்தி தெரிவிக்கும்போது, பரம்பரையாக இந்து மக்கள் வாழ்ந்து வரும் இடத்தில் கிறிஸ்துவ மக்களுக்காக சுடுகாடு அமைத்தல் நாளை மத மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் எனவே இந்த முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட்டு இடுகாடு அமைப்பதை தடுக்க வேண்டும். தவறினால் கிராம மக்களை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ராஜ்குமார் தெரிவிக்கும் போது, பல வருடங்களாக அப்பகுதியில் கருப்பண்ணசாமி கோவிலை அமைத்து வழிபட்டு வருகிறோம். அப்பகுதியில் கிறிஸ்துவ மக்களுக்கு சுடுகாடு அமைத்தல் அது மத நல்லிணக்கத்திற்கு கேடாக அமையும். எனவே அரசு கிறிஸ்தவர்களுக்கு இப்பகுதியில் இடுகாடு அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
Next Story